இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஊடாக இலங்கையிலிருக்குமு் முஸ்லிம் சமூகத்துக்கு துரோகம் இழைக்கப்பட்டதாக இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் உணர்ந்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் முன்னாள் அமைச்சர் அப்துல் ரசாக் மன்சூர் மீதான அனுதாப பிரேரணையை வியாழக்கிழமை சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தன ஆகியோருக்கு இடையே இந்திய - இலங்கை ஒப்பந்தம் 1987 ஜூலை 29 அன்று கொழும்பில் கையெழுத்திடப்பட்டது.
அவர் தொடர்ந்து கூறுகையில் “இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக கிழக்கில் இருந்த அரசியல் வலிமையை முஸ்லிம்கள் இழந்தனர். இந்திய - இலங்கை உடன்படிக்கையுடன், முழு முஸ்லிம் சமூகமும் தாங்கள் காட்டிக் கொடுக்கப்பட்டதாக உணர்ந்தது. ஏனெனில் இது வடக்கு மற்றும் கிழக்கின் தற்காலிக இணைப்புக்கு வழி வகுத்தது” என்றார்.